Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதலா?… தீயாய் பரவும் தகவல்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ்ஷும்  இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன் ,விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் ‌. இவர் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான ‘மகாநதி’ / ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் . தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ்ஷும் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது .

அனிருத், கீர்த்தி சுரேஷ்

மூன்று மாதங்களுக்கு முன் அனிருத்தின் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் . தற்போது இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது . ஆனால் இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் தரப்பில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஏற்கனவே அனிருத் நடிகை ஆண்ட்ரியாவை முத்தமிடும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |