தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த மற்றும் சாணிக்காயிதம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த சர்க்காரு வாரி பாட்டா திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் மற்றும் தெலுங்கில் நானியுடன் இணைந்து தசரா போன்ற திரைப் படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வளவு கூட்டத்திற்கு இடையில் நடிகர் விஜயின் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Kutti Story Vibe ❤️ @KeerthyOfficial
— Filmy Kollywud (@FilmyKollywud) October 31, 2022