Categories
தேசிய செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கெஜ்ரிவால் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடத்தை வீதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவால் மீறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ, சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாக இருக்கிறதெனக் கூறி, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Arvind Kejriwal  EC  Notice to Delhi CM  அரவிந்த் கெஜ்ரிவால்  தேர்தல் நடத்தை விதிகள்

மேலும், இது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்; இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Arvind Kejriwal  EC  Notice to Delhi CM  அரவிந்த் கெஜ்ரிவால்  தேர்தல் நடத்தை விதிகள்

Categories

Tech |