Categories
மாநில செய்திகள்

“கேல்ரத்னா விருது”… தமிழகத்தைச் சார்ந்த வீரர் சாதனை… வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்…!!

கேல் ரத்னா விருது பெற இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேல்ரத்னா விருது பெற இருக்கும் மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வேல்முருகன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், “விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டது, மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது சார்பிலும், தமிழ்நாடு பாஜக தொண்டர்கள், தலைவர்கள் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழையும், தமிழர்களையும் கௌரவப்படுத்தும் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கும், விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கும் இந்நேரத்தில் நம் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாரியப்பனோடு, இதே விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இதர இந்திய வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.

Categories

Tech |