Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழா ….. கோலாகல கொண்டாட்டம் …. குவிந்த நட்சத்திரங்கள் ….!!!

74-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் புகழ்பெற்ற பால்ம் டோர் விருதானது ‘டைடேன்’ திரைப்படத்துக்கு  வழங்கப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற  திரைப்பட விழாவான ‘கேன்ஸ் திரைப்பட விழா’ ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில்  நடத்தப்பட்டு வருகிறது . இந்த விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது .ஆனால் கடந்த ஆண்டு நடக்கவிருந்த இந்த  திரைப்பட விழா கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்ற 74-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு  நாடுகளை சேர்ந்த நடிகர் ,நடிகைகள் மற்றும் பிரபலங்கள்  பலர் கலந்து கொண்டனர் .

இதில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்கா நாட்டை சேர்ந்த  காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்-க்கும்,சிறந்த நடிகைக்கான விருது நார்வேவை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே-க்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து புகழ்பெற்ற பால்ம் டோர் விருதானது  ‘டைடேன்’என்ற பிரான்ஸ் திரைப்படத்துக்கு  வழங்கப்பட்டது.

Categories

Tech |