Categories
Uncategorized உலக செய்திகள்

வைரஸ் கட்டுக்குள் வந்தாச்சி… பள்ளிகள் திறந்தாச்சி… இப்படித்தான் நீங்க வரனும்…!!

கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் 9 மதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது.

கென்யா நாட்டில் நைரோபி நகரில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆபிரிக்க நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது. கொரானா வைரஸ் சீனாவில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வைரஸ் நாடுகளில் பரவ தொடங்கியது. அதிலும் கென்யாவில் மார்ச் மாதத்திற்குப் பின்னரே பரவியது.

இதனிடையே  கென்யா நாட்டில் அனைத்து பள்ளிகளும் காலவரையின்றி மூடப்படும் என மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த  நாட்டில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக இருந்தாலும் தற்போது கென்யா நாட்டில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அந்த நாட்டு அரசு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பின்னரே பள்ளிகள் திறக்கப்பட்டது.

மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வரும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வகுப்புகளை கட்டிடத்திற்கு வெளியே மரத்தின் அடியில் வைத்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |