கேரள விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வந்த ஏர் இந்தியாவின் IX1344 விமானம் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கேரள விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமானம் விபத்து விசாரணை முகமை குழு ஒன்றை அமைத்துள்ளது. 5 பேர் கொண்ட இந்த குழு விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து அடுத்த 5 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.