கொரோனாவை கட்டுப்படுத்த நிதி தேவைப்படுவதால் அமைச்சர்கள், மற்றும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி,
தற்போது கேரள முதல்வர் பினராய் விஜயன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நிதி இல்லாததன் காரணமாக ஒரு வருடத்திற்கு கேரளா எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் ஊதியம், படியில் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அரசு வாரியங்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் ஊதியத்திலும் 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.