Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் முதலிடம்….. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த….. கேரள சுகாதாரத்துறை அமைச்சர்…..!!

உலகின் சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் முதல் இடத்தை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பிடித்துள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்கள்  இந்த நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த சிறப்பாக செயலாற்றி வந்தாலும், கேரளா இதனை கட்டுப்படுத்துவதில் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. அதிலும்,

கேரளாவில் சிறப்பாக பணியாற்றி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கு  இந்தப் பணிக்காக சிறப்பான விருது  ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த பிராஸ் பெக்ட் என்ற பத்திரிக்கை உலகின் சிறந்த 50 சிந்தனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் கொரோனா பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாகக் கையாண்டார் எனவும், அந்தப் பத்திரிகை பாராட்டியுள்ளது. அந்நாட்டு பத்திரிகை வெளியிட்ட இந்த பட்டியலில் முதல் ஆறு இடத்தை பெண்கள் தான் பெற்றிருந்தனர் என்பதும்,  இரண்டாவது இடத்தை நியூஸிலாந்து  நாட்டின் பிரதமர் பிரதமர் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |