Categories
தேசிய செய்திகள்

கேரளா சட்டமன்ற இடைத்தேர்தல் : காங்கிரஸ்_ஸா ? கம்யூனிஸ்ட்_டா ?

கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கேரளா மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்ட்து.

Image result for kerala cpm vs congress

கேரளா சட்டமன்ற இடைத்தேர்தல் : 

மஞ்சேஸ்வர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய முஸ்லீம் லீக் வேட்பாளர்கமாரூதின் 7,923 வாக்கு வித்தியாசத்திலும்,

எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினோத் 3750 வாக்கு வித்தியாசத்திலும் ,

அரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷானிமோல் ஒஸ்மான் 2079 வாக்கு வித்தியாசத்திலும் ,

கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெனிஸ் குமார் 9953 வாக்கு வித்தியாசத்திலும் ,

வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன் குமார் 14465 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Categories

Tech |