கேரளா திருவனந்தபுரத்தில் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மிக வேகமாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதுமட்டுமின்றி கோழி உள்ளிட்ட அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்த பறவைகளின் சடலங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கேரளாவிலும் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா மக்கள் கொரோனா இரண்டாம் அலை,ஷிகெல்லா பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். மேலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் அண்டை மாநிலங்களுக்கும் இந்த அச்சம் பரவியுள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சல் குறித்து விலங்குகள் நலத்துறை அமைச்சர் கே.ராஜூ கூறுகையில்:”கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தின் நீன்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.