Categories
தேசிய செய்திகள்

3 நாட்கள் தொற்று….. முடிவெடுத்த கேரளா….. ஒரு ஆண்டுக்கு அதிரடி …..!!

கேரளாவில் கொரோனா தொற்றின்  தாக்கம் மீண்டும் அதிகரிப்பதால் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதல் முதலில் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. ஆரம்ப கட்டத்தில் கேரளாவில் தொற்று அதிக அளவு இருந்தாலும் பின்னர் பல நடவடிக்கைகளால் அங்கு பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக அங்கு தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த 3 தினங்களில் மட்டும் 600க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கேரளாவில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5205 ஆக அதிகரித்துள்ளது. 3048 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாக தொற்று அதிகரித்து வருவதால் கேரள அரசு விதிமுறைகளை கடுமையாக்கி முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியையும் ஒரு வருடம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |