Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தேர்தல் நிதி தராத கம்யூனிஸ்ட் தொண்டர் வீட்டு சுவர் இடித்து தரை மட்டம்…. போலீஸ் விசாரணை …!!

காஞ்சான்கோடு பகுதியில் கம்யூனிஸ்ட் தொண்டர் கட்டி வந்த வீட்டின் சுவர் தரைமட்டம் செய்யப்பட்டு அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் கொடி நடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகிலுள்ள காஞ்சான்கோடு பகுதியில் ராசிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி உறுப்பினர் பணியில் உள்ளார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணி செலவுக்காக ராசிக்கிடம் நிதி கேட்டுள்ளார்கள். ஆனால் ராசிக் நிதி கொடுக்காமல் காலதாமதம் செய்துள்ளார். அதன்பின் கோபமடைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் ராசிக் புதிதாக கட்டிக் கொண்டிருந்த வீட்டை இடித்து  அங்கு ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ராசிக்காசர் கோடு காவல்துறை நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை செய்தபோது அஞ்சானூர்  பஞ்சாயத்து துணைத்தலைவர் சபேஸ் காவல்துறையிடம் பஞ்சாயத்து அனுமதி இன்றி வீடு கட்டி வருவதாக புகார் தெரிவித்தார். அது பொய்யான புகார் என்று கூறி ராசி வீடு கட்ட பஞ்சாயத்து அனுமதி பெற்ற ஆவணங்களை காவல்துறையிடம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |