Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பேய் மழை… 151 வருட பழமையான தேவாலயம் சரிந்தது… உயிர்சேதம் இல்லை…!!

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பெய்து வரும் பேய் மழை காரணமாக உள்ள 151 வருடகால பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயம் இடிந்து விழுந்துள்ளது.

ஆலப்புழா நெல்வயல்களின் நடுவே தேவாலயம் ஒன்று 151 வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்திருக்கும் பம்பா அணை திறந்து விடப்பட்டதால்  பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் தேவாலயத்துக்குள் புகுந்து விட்டது.

இதையடுத்து 151 வருட கால தேவாலயம் இடிந்து விழுந்தது. அதிகாரிகள் முன்கூட்டியே வெள்ள அபாயம் குறித்து எச்சரித்ததால், தேவாலயத்தில் இருந்த நிர்வாகிகள் நல்ல வேளையாக முன்கூட்டியே வெளியேறி தப்பி விட்டனர்.

Categories

Tech |