Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்… ஸ்வப்ணா ஜாமீன் மனு தள்ளுபடி… நீதிமன்றம் உத்தரவு…!!

தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா கொடுத்திருந்த ஜாமின் மனு தாக்குதலை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரளவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை  சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வழக்கு குறித்து என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையும்  விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த தங்க கடத்தல் விவகார வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் ஸ்வப்னா சுரேஷை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அதன் பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது 150 கிலோ தங்கத்திற்கும்  மேலாக கடத்தி வரப்பட்டுள்ளது என்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது. இதற்கிடையில் ஸ்வப்னா ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் மீண்டும் ஸ்வப்னா ஜெயிலில் அடைக்கப்பட உள்ளார். ஏற்கனவே ஸ்வப்ணா என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |