பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், மாணவர் அமைப்பினர் அரசியல் கட்சிகளின் பின்புலத்தைக் கொண்டு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. ஆகவே போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, கல்லூரிகள் படிப்பதற்கு மட்டும் தானே தவிர போராட்டம் நடத்துவதற்கு கிடையாது எனத் தெரிவித்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இனி போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்தார். மேலும் இதை யார் மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.