Categories
தேசிய செய்திகள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் காரை வழிமறித்த தமிழக பெண் ….!!

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவு சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் திரு. பினராயி விஜயனை, தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக பெண் ஒருவர் வழி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜ மலைப்பகுதியில் அண்மையில் நிகழ்ந்த நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலைகள் சேதங்களை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பினராய் விஜயன் மூணாறு வந்தார். அப்போது அவரது வாகனம் செல்லும் சாலையில் அமர்ந்து விஜயா என்ற பெண்மணி தர்ணாவில் ஈடுபட்டார்.

தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர் கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து போக்குவரத்தை இடையூறு செய்ததாக அப்பெண்மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Categories

Tech |