Categories
உலக செய்திகள்

‘தலீபான்களிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய பெண்’…. தீவிரவாத அமைப்புடன் சகவாசம்…. பேட்டி அளித்த நிமிஷாவின் தாய்….!!

தலீபான்களிடம் ஒப்படைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பெண்ணின் தாய் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்  நிமிஷா பாத்திமா. இவர் தனது கணவருடன் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார். இதனை அடுத்து அவரது கணவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து நிமிஷா பாத்திமா கடந்த 2019 ஆம் ஆண்டு 400 தீவிரவாதிகளுடன் இருந்த ஆப்கான் படையினரிடம் சரணடைந்தார். இவரை தலீபான்கள் சிறை வைத்திருந்தனர். மேலும் கடந்த ஞாயிறுகிழமை நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றிய தலீபான்கள்  சிறையிலிருந்தவர்களை விடுவித்துள்ளனர். அதில் பாத்திமாவும் தனது குழந்தையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை கேரளாவைச் சேர்ந்தவர்களுடன் நாடு கடத்த தலீபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அரசு நிமிஷா பாத்திமா மற்றும் அவரது குழந்தையை மீண்டும் தலீபான்களிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியானது. இது குறித்து நிமிஷா பாத்திமாவின் தாயான பிந்து சம்பத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “எனது மகளையும், பேத்தியையும் விடுவித்துவிட்டார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அவர்கள் மீண்டும் தலீபான்களிடம் ஒப்படைக்கதை அடுத்து மிகவும் வருந்தினேன்.

எனது மகள் தாய் நாட்டிற்கு எதிராக அநீதி இழைத்திருந்தால் அவளை இந்திய சட்டத்தின் படி தண்டித்து விடுங்கள். நான் இதை நான்கு வருட காலமாக கூறி வருகிறேன். மேலும் அவள் ஆப்கானில் இருந்து நாடு கடத்தப்பட்டால் என் பேத்தியை நன்கு கவனித்துக் கொள்வேன். இல்லையெனில் எனது பேத்தியும் தீவிரவாதிகளின் துன்புறுத்தலுக்கு ஆளாகிவிடுவாள். குறிப்பாக  கடந்த 2017 ஆம் ஆண்டு பயிற்சி நிலையம் ஒன்றிற்கு சென்றபோது அங்குள்ள தீவிரவாதிகளாலும் மருத்துவர் ஒருவராலும் எனது மகள் மூளைசலவை செய்யப்பட்டாள்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |