கேரள விமான விபத்தின் மீட்புப்பணியை மேற்கொண்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்து விட்டனர். விபத்து ஏற்பட்டதும் கொரோன வைரஸ் தொற்றை பற்றி ஏதும் யோசிக்காமல் மீட்புப்பணியில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வெகு சிறப்பாக செயல்பட்டு விரைவாக மீட்புப்பணியை முடிவுக்கு கொண்டு வந்தனர். துபாயில் இருந்து வந்த விமானம் என்பதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்தா வண்ணம் இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா சோதனை செய்ய வேண்டும் என கேரள அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்ட 22 கேரள அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே. சைலஜா இது குறித்து கூறும்போது, ‘‘கேரளாவில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.