Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை…!!

கேரளாவில் அதிகரிக்கும் பருவமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில்  36 பேர் பலியாகியுள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி உள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மழையால் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |