கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிக அளவில் பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர இன்று மற்றும் நாளை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி நிரம்பியுள்ளது. நாளுக்கு நாள் இதனின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதிலும் கேரளாவில் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இரண்டாவது அலையின் வேகத்தை கண்டு மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் மாநில அரசு விதிக்கப்பட்டும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதற்கு முன்பாகவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடை முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளதால், இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விதி முறைகளின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு அதாவது இன்றும் நாளையும் முழு ஊரடங்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமுல் படுத்தியுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்ற அரசு தொடர்பான பணிகள் அனைத்தும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே பணியினை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் அதற்கான ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் அதன் பின்னரே அனுமதிக்கப்படுவர். அதன்பின் அத்தியாவசிய தேவையான மருத்துவம், பால், காய்கறி, செய்தித்தாள் விநியோகத்திற்கு தடை இல்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கட்டுப்பாடு விதிமுறைகளுடன் வழக்கம் போல் செயல்படும். அத்தியாவசிய தேவைக்கான கடைகள் இரவு 7.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிறகு பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள் இது போன்ற அனைத்துமே மூடப்படும். நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கு எந்த தடையும் இல்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தாள் அபதாரம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். விதி மீறலை கண்காணிக்க மாவட்ட அளவில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.