அமெரிக்காவில், குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தப்பட்டதால் கேரளாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அலபாமா என்னும் மாகாணத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயது மாணவியான மரியம் சூசன் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரின் குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மஸ்கட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், சூசன் குடியிருப்பில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று மேல் மாடியில் வசித்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த தோட்டாக்கள் சூசன் மீது பாய்ந்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாரிகள் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.