Categories
தேசிய செய்திகள்

Breaking : ”கேரள மாணவி உடல்நிலை சீராக உள்ளது” அமைச்சர் பேட்டி …!!

கொரனா வைரஸ் பாதித்த கேரளா மருத்துவ மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் தற்போதைய எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,982 பேர் இந்த வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 9,692 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் கொரனா வைரஸ் அறிகுறிகள் உள்ள 4 பேரில் மாணவி ஒருவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.  இந்நிலையில் வைரஸின் வைரசால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை சைலஜா தெரிவித்துள்ளார்.  கொரானா பாதிப்பு குறித்து குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |