மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட தமிழகம், கேரளாவுக்கு மிகக் குறைந்த அளவுநிதி ஒதுக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் முதல்முதலாக கொரோன வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவில் 2 உயிரிழந்துள்ள நிலையில் 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல மகாராஷ்டிராவில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவும் மாறி மாறி அதிக பாதிப்பு பெற்ற மாநிலமாக மாறி, மாறி வந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா முதலிடத்திலும் நீடித்தன.
தமிழகம் 485 பாதிப்புடன் 2ஆம் இடத்தில் இருந்து வரும் நிலையில் டெல்லி (445), கேரளா (295) என அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தான் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா பேரிடர் மேலாண்மை தடுப்புத் திட்டத்தின் கீழ் நிதி வழங்கியுள்ளது. மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு ரூ.1,611 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.966 கோடியும், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 910 கோடி, பீகார் மாநிலத்துக்கு ரூ.710 கோடி, ஒடிசா மாநிலத்துக்கு ரூ.810 கோடி, ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.710 கோடியும், மேற்கு வங்க மாநிலத்துக்கு ரூ.505.50 கோடியும் என பல்வேறு மாநிலங்களுக்கும் கொரோனா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதலவர் வென்டிலேட்டர்கள், N95 மாஸ்க்குகள் வாங்கி கொரோனவை கட்டுப்படுத்த ரூ.9000 கோடி தேவை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தமிழகத்துக்கு வெறும் ரூ.510 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இருக்கும் தமிழகத்துக்கு ரூ.510 கோடி ஒத்துக்கி அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு கேரளாவுக்கு 157 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இதையும் படியுங்க: ரூ.9,000,00,00,000 வேணும்…. தமிழகத்துக்கு கொடுங்க….. பிரதமருக்கு முதல்வர் கடிதம் ….!!