Categories
தேசிய செய்திகள்

கேரள தங்கக் கடத்தல் சுவப்னாவுக்கு நான்கு நாட்கள் என்.ஐ.ஏ. காவல்..!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா சுரேசை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயருக்கு தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டன. இதை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்  முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்சை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஸ்வப்னா சுரேஷ்சை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Categories

Tech |