Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா உள்ளிட்ட 5 பேர் இன்று ஆஜராக உத்தரவு..!!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்ட 5 பேர் நாளை நேரில் ஆஜராக கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் வழக்கில் தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் அவரது நண்பர் சந்திப் நாயர்    உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஸ்வப்னா நெஞ்சுவலி காரணமாக திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஸ்வப்னா மற்றும் சந்திப் நாயர் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி என்ஐஏ தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கேரளா தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர்  உள்பட 5பேர் இன்று ஆஜராக வேண்டும் என கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |