கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த வந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 7-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இதில், குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த 30 வீடுகள் மண்ணோடு புதைந்து விட்டன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில், 6வது நாளாக இன்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் மேலும் இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இதுவரை, நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.