Categories
கொரோனா தேசிய செய்திகள்

கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா…!!

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பங்கு அதிகமாகும். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம். இந்நிலையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் ஆனது இந்த குழுக்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மருத்துவம் மேலாண்மை ஆகியவற்றை இந்த குழு மேலும் வலுப்படுத்தும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நோய்தொற்று அறிதல்  அதன் சவால்கள் ஆகியவற்றை பணிகளில் மாநில அரசுகள் திறம்பட நிர்வகிக்கும் வகையில் இந்த குழு வழிகாட்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |