வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கோழிக்கோடு விபத்தால் அதற்கு பாதிப்பு வராது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் பல்வேறு நாடுகளிலிருந்து, வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்று அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வந்த பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளான போதிலும், இந்த திட்டம் தொடர்ந்து நடைபெறும் என மத்திய அரசு கூறியுள்ளது. எந்த வகையிலும் இந்த திட்டம் பாதிக்கப்படாது என்றும், வெளிநாடுகளில் சிக்கி இருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்படுவார்கள் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.