Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு… ஐஏஎஸ் அதிகாரி தொடர்பு… 5 மணி நேரம் விசாரணை…!!

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 5 மணிநேரம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கேரள முதல் அமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. போலி சான்றிதழ் மூலம் கேரள அரசின் ஐ.டி துறையில் சுவப்னா சுரேஷுக்கு உயர் பதவி கிடைக்க உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து, பல்வேறு ஆதாரங்களின் படி தேசிய புலனாய்வு அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிவசங்கரனிடம் கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் சென்ற மாத இறுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவசங்கரனிடம் நேற்று மாலை விசாரணை நடந்தது. தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் அவரை விசாரித்தனர். இரவில் விசாரணை முடிந்த பின் சிவசங்கர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

Categories

Tech |