கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனாா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதி மறுக்கப் படுவதாகவும், தடைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.