Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

ஜாதி வெறி… மூன்று மாதத்தில் முடிவுக்கு வந்த… காதல் திருமணம்..!!

காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த மாற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ச்சியாக அனிஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை அனிஷ்  சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பெண்ணின் அப்பா பிரபு குமார், மற்றும் பெண்ணின் மாமா சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் மாமா சுரேஷ் அனிஷின் வீட்டிற்கு  வந்து இருவரையும் ஒன்றாக வாழ விட மாட்டோம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து  அனிஷின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் காதல் தம்பதியருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இது திட்டமிட்ட கொலை என்று அனிஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவத்தை அனிஷின் சகோதரர் நேரில் பார்த்துள்ளார். அனிஷை  கொலை செய்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் அனிஷை வாளால் வெட்டிக் கொலை செய்ததாகவும் அவரது சகோதரர் கூறியுள்ளார் . இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |