சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரை பகுதியில் வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மற்றும் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியராஜா, துணைத்தலைவர்கள் முருகன், அசோக், தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் தொகுதி துணைச்செயலாளர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ் சிறப்புரையாற்றியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் ஜகன்மோகினி வேடமணிந்து சமையல் அடுப்பில் கால்களை வைத்து பாத்திரத்தில் சமைப்பது போல நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.