Categories
தேசிய செய்திகள்

“KGF ராக்கி பாய் போல்”…. சீரியல் கில்லராக மாறிய இளைஞர்…. 4 பேர் கொடூர கொலை….!!!!!

நான்கு காவலாளிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் என்ற பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் நான்கு காவலாளிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளை யார் செய்தது என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மர்ம கொலையாளி ஐந்தாவது ஒரு காவலாளியை கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பாதிக்கப்பட்ட நபர் கூறிய கொலையாளியின் அடையாளங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் நான்கு காவலாளிகளை கொலை செய்தது சாகர் பகுதியை சேர்ந்த 19 வயது சிவப்பிரசாத் துருவ் என்ற இளைஞர் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது கேஜிஎப் படத்தில் வரும் ராக்கி பாய் கதாபாத்திரம் போன்று பெரிய கேங்ஸ்டர் ஆக நினைத்த இந்த கொலைகளை செய்ததாக அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐந்து நாட்களில் நான்கு காவலாளிகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |