Categories
தேசிய செய்திகள்

KGF 2 ரிலீஸ் நாளில் தேசிய விடுமுறை?… என்னங்கடா இதெல்லாம்…!!!

இந்தியாவில் கேஜிஎஃப்2 திரைப்படம் வெளியாகும் நாள் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வருகின்ற கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் முதல் பாகம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ஜூலை 16-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படம் வெளியாகும் நாள் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு யஷ் ரசிகர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். இது படம் மட்டுமல்ல எங்கள் உணர்வு” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |