நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . கேஜிஎப் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது .
@VKiragandur @TheNameIsYash @prashanth_neel @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @BasrurRavi @bhuvangowda84 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd@Karthik1423 @KRG_Connects @SillyMonks pic.twitter.com/Br3VoxIEAb
— Hombale Films (@hombalefilms) January 5, 2021
மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என படக்குழு தெரிவித்திருந்தது . இந்நிலையில் ‘கேஜிஎப் டைம்ஸ்’ என்ற பெயரில் ஹீரோவா ?இல்ல வில்லனா ?,ராக்கி தேர்ந்தெடுப்பது காதலா? ஆளுமையா ? என்பது போன்ற வசனங்களுடன் நேற்று வெளியான போஸ்டர் ஏராளமான லைக்ஸை குவித்துள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நடிகர் யஷ் பிறந்த நாளான ஜனவரி 8ஆம் வெளியாகவுள்ளது. இந்த டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் .