‘கேஜிஎப் 2’ டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதற்க்கு நடிகர் யஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. மேலும் அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தைக் காண ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
Thank you.. 🙏 pic.twitter.com/XpHChGiCVD
— Yash (@TheNameIsYash) January 9, 2021
சமீபத்தில் நடிகர் யஷ்ஷின் பிறந்தநாளில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஆவலுடன் இருப்பதாக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கே ஜி எஃப் 2 டீசர் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிரட்டலான சாதனையை படைத்துள்ளது . இதனை படக்குழுவினரும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் . இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் யஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.