கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பிராஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் வெளியாகி உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் கேஜிஎஃப் 2 ரூ. 1200 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் கேஜிஎப் படங்களை தொடர்ந்து இயக்குனர் பிராஷாந்த் நீல் தற்போது சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவாக, நடிக்க சுருதிஹாசன் ஹீரோயினாக படிக்கிறார்.
இப்படத்தில் பிரபல நடிகர் பிருத்திவிராஜ் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஹொம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சலார் திரைப்படத்தில் பிரித்திவிராஜ் வரதராஜ மன்னர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் பிரித்திவிராஜன் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.