கேஜிஎஃப் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக இயக்கி முடித்து விட்டார்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸின் ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சலார் திரைப்படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவரது அடுத்த படத்தில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கிறார். இதனை ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.