Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் தமிழர்களை சந்தித்து பேசிய நடிகர் விக்ரம்…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!

பா.இரஞ்சித் டைரக்டு செய்யும் “தங்கலான்” படத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப் பற்றிய கதை என பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் இந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருடன் நடிகர் விக்ரம் ஒகேனக்கல் ஆற்றில் குளித்து விளையாடும் வீடியோவை தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்து உள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |