விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போன்று இல்லாமல் பிக்பாஸ் சீசன் 6 ஆனது முதல் நாளில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் போன்றவைகள் பிக்பாஸ் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் குவின்சியிடம் அசல் கோலார் அத்துமீரும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே குவின்சியின் பின்னால் செல்வதே அசலின் வேலையாக இருக்கிறது என பிக்பாஸ் பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் பிறகு தற்போது குவின்ஸி விக்ரமனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அசல் குவின்சியின் கையை தடவிக் கொண்டிருக்கிறார். இவன் வேற என்று கடுப்பான குவின்ஸ் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விக்ரமனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் உங்களை நம்பி தானே பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்கள் செல்கிறார்கள் அவர்களுக்கு இப்படி பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறதே என்று பார்வையாளர்கள் பொங்கி எழுந்துள்ளனர். மேலும் கோளாறு புடிச்ச கோலார் பையனுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://twitter.com/BBFollower7/status/1581688883561271296?s=20&t=qDulEwnJZAXPjCUqBrYNFg