இந்தோனேசியா நாட்டில் 61 வயதான முதியவர் 88-ஆம் முறையாக திருமணம் செய்யவுள்ளார்.
இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் இருக்கும் மஜலெங்கா பகுதியில் வசிக்கும் கான் என்ற நபர் “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தான் 88-ஆம் தடவையாக திருமணம் நடக்கவுள்ளது. தன் 14 வயதில் அவர் முதல் திருமணத்தை செய்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு இவரை விட இரண்டு வயது அதிகம்.
இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். அங்கிருந்து ஆரம்பமானது தான் கல்யாணம் மன்னனின் திருமண படலங்கள். இது குறித்து கல்யாண மன்னனான கான் தெரிவித்ததாவது, முதல் மனைவியிடம் நான் மோசமாக நடந்து கொண்டேன். எனவே அவர் இரண்டு ஆண்டுகளில் என்னை விட்டு பிரிந்து விவாகரத்து வாங்கி சென்று விட்டார்.
பெண்களுக்கு நன்மை இல்லாத விஷயங்களை நான் செய்ய மாட்டேன். அவர்களின் உணர்வுகளோடு விளையாட மாட்டேன். எனவே, ஒழுக்கம் இல்லாமல் நடப்பதை விட திருமணம் செய்து கொள்வது சிறப்பானது தான். எனவே தான் 88-ஆம் முறையாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன்.
அந்த பெண் எனது 86-ஆம் மனைவி தான். நாங்கள் இரு மாதங்கள் தான் ஒன்றாக வாழ்ந்தோம். அதன் பிறகு பிரிந்து விட்டோம். ஆனாலும் அவர் மீண்டும் என்னைதான் திருமணம் செய்ய விரும்புகிறார். மேலும் தனக்கு கோபம் உண்டாவதிலிருந்து விடுபட்டு பல பெண்கள் என்னை நேசிக்க ஆன்மீகத்தின் உதவியையும் நாடி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
87 திருமணம் செய்த அவருக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.