பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பல இன்னல்களுக்கு பிறகு வாழ்க்கையை தைரியத்துடன் எதிர்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Kheira Saadi (32) எனும் இளம்பெண் தனது சிறுவயதில் தந்தை சிறைக்கு சென்று விட்டதால் குழந்தை காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு அவருக்கு பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல இன்னல்கள் நேர்ந்துள்ளது. அதன் பிறகு தனது 14 வயதில் யாராவது தன்னை ஆதரிக்க மாட்டாரா என ஏங்கிய போது தவறான நண்பர்கள், தவறான இடம் என அனைத்துமே Kheira-வுக்கு எதிராகவே அமைந்துள்ளது. இந்நிலையில் Kheira ஒருவரை காதலிக்க, ஆனால் அவரோ Kheira-வை மிகமோசமாக கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு Kheira-வுக்கு குழந்தை ஒன்று பிறந்தவுடன் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது காதலனிடமிருந்து தப்பித்து Kheira பிரஸ்ஸல்சுக்கு சென்றுள்ளார்.
அங்கு தற்காப்பு கலையான பாக்ஸிங் கற்று தேர்ந்தார். இதையடுத்து தேவையான அளவு பணத்தை சம்பாதித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு தனது மகளுடன் சென்றிருக்கிறார். அங்கு Kheira நர்ஸிங் கற்று கொண்டு பல போட்டிகளில் கலந்து வெற்றியும் பெற்றுள்ளார். இருப்பினும் பாக்ஸிங் தனக்கு தைரிய உணர்வை ஏற்படுத்துவதாக கூறிய Kheira தான் பாக்ஸராகவே ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை இனிமேல் யாரும் துன்புறுத்த முடியாது அவ்வாறு செய்தால் பின்னி எடுத்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.