Categories
விளையாட்டு

கேல் ரத்னா விருது : நீரஜ் சோப்ரா உட்பட 12 பேர் தேர்வு …..! மத்திய அரசு அறிவிப்பு ….!!!

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது துரோணாசாரியா விருது மற்றும் தயான்சந்த் விருது ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கபடுகின்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது .இதில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் அதோடு ரூபாய் 25 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது .

இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற  நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிக்குமார் ,குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா,பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அவனி லெஹரா, மணிஷ் நார்வல், சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்) ,  பிரமோத், கிருஷ்ணா(பேட்மிட்டண்), ஹாக்கியில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ,இந்திய மகளிர் அணியின் ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |