Categories
அரசியல் சற்றுமுன்

இது தான் அரசியல் ஆட்டம்…. 10ஆண்டுகளில் 3கட்சிக்கு தாவிய குஷ்பு …..!!

பாஜகவில் இணைந்த குஷ்பு கடந்த 10ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் என 3 கட்சிக்கு மாறி இருக்கின்றார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக நேரம் ஒதுக்கப்படவில்லை.

இதனால் டெல்லியில் இருந்து திரும்பிய குஷ்புவை பாஜக நிர்வாகிகள் தொடர்பு கொண்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து குஷ்பு, குஷ்பு கணவர் பாஜகவில் இணைய டெல்லி சென்றனர்.  தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் சி.டி ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில் ஐக்கியமான நடிகை குஷ்பூ 2014 ல் திமுக வில் இருந்து விலகினார். 2014 நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்பு தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |