Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட குஷ்பு…. தரையில் அமர்ந்து தொடர் போராட்டத்தால் பரபரப்பு …!!

திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டு ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளார்.

மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதில் பங்கேற்க சிதம்பரம் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே தடுத்து நிடுத்தப்பட்டு மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்டார்.

பின்னர் குஷ்புவை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார், கோடம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கே பாரதீய ஜனதா கட்சி தொடர்கள் குவிந்தனர். இதை தொடர்ந்து ஓட்டல் வளாகத்தில் பாஜகவினர் உடன் தரையில் அமர்ந்து திருமாவளவனுக்கு எதிராக முழக்கமிட்டு தொடர் போராட்டத்தில் குஷ்பு ஈடுபட்டு வருகின்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |