குஷி திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்ற 2000 வருடம் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் குஷி. இத்திரைப்படம் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ் என பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சென்ற 2001 ஆம் வருடம் தியேட்டரில் வெளியாகி அதிக வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கி இருந்தார். இந்த நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி தெலுங்கு குஷி திரைப்படம் தியேட்டரில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றது. இது குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.