கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட் செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும்.
இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித மாடல்களில் கிடைக்கிறது. மேலும், இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் மற்றும் டீசல் என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது. இந்த இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது.
மேலும், பெட்ரோல் என்ஜினுடன் 7-ஸ்பீடு டி.சி.டி. மற்றும் டீசல் என்ஜினுடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி கியா செல்டோஸ் காரானது 1.5 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜினுடனும், மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. குறிப்பாக இந்த மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.