Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர் …. கைது செய்த போலீசார் ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர் .

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குத்தாலம்,ஆலங்குடி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆலங்குடி தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆலங்குடி பழவாறு பாலம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது .

இதையடுத்து பழவாறு பாலம் பகுதியை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் என்பவரையும் பிடித்து குத்தாலம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குத்தாலம் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த  6½ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |