விற்பனைக்காக சாராயம் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செம்போடை கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சட்டவிரோதமாக சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இந்த தகவலின் படி செம்போடை கிராமத்தில் தெற்கு காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் வீட்டில் பின்புற பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தனர் .அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 110 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் .இதையடுத்து செந்தில் குமாரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.